கற்றவித்தை ஏதுமில்லை, காட்டு மனிதன்,ஐயே —பாரதி





நண்பனின் இரகசியம்
(ஐந்தடிப் பஃறொடை வெண்பா)
உளங்கசிந்த நேரம் உளறினாய் நீச்சற் குளத்துள் சிறுநீர் குசும்பாய்க் கழித்ததை. "யாரிடமுஞ் சொல்லாதே" என்றாய். இதைப்போய்நான் யாரிடஞ் சொல்வேன்? இணையத்தில் ஏற்றலாம் யாப்பிலொரு பாட்டினை யாத்து.
![]()
![]()
![]()
![]()
![]()
