கற்றவித்தை ஏதுமில்லை, காட்டு மனிதன்,ஐயே —பாரதி





தப்புக்கழகு
(பன்னிரண்டடியான் வந்த பஃறொடை வெண்பா)
புத்தம் புதிதாய்ப் புலம்பெயர்ந்த பேட்டையில் தப்பட்டை இல்லார் தவறியுங் கூடஇல்லை. பண்டிகையோ ஒன்றுவிட்ட பங்காளி நீத்தாரோ மண்ணெண்ணெய் ஊற்றியதில் மக்காத குப்பையிட்டுத் தப்பட்டை வாட்டுவர்; தட்டித்தட் டிப்பார்ப்பர். தப்பத் தெரியாது; தட்—டித்-தட் டிப்–பார்ப்பர். பண்டிகை கொஞ்சமல்ல, பங்காளி கொஞ்சமல்ல, கண்கள் இராத்தூக்கம் கண்டது தான்கொஞ்சம். அண்டை அயலே! அடியேனின் யோசனைகேள்: புண்ணியமாய்ப் போகும், புதுமையாய்க் காட்சிதரும் சாணி மெழுகியுடன் சாத்திரஞ் சொல்லியதை ஆணியில் மாட்டும் — அழகு!
![]()
![]()
![]()
![]()
![]()
