கற்றவித்தை ஏதுமில்லை, காட்டு மனிதன்,ஐயே —பாரதி
எலி வேட்டை
(பன்னிரண்டடியான் வந்த பஃறொடை வெண்பா)
based on The rat trappers by Janaki Lenin
வயலில் எலியின் வளையை அடைந்து புயலாய் அதன்அனைத்துப் பொந்தும் அடைத்துப் பசுந்தழை கொண்டொருமண் பானை நிறைத்துப் பொசுங்க நெருப்புப் பொறியதில் இட்டுத் திறந்தொரு பொந்தில் திறம்படச் சாய்த்துச் சிறியதோர் ஓட்டையதில் சில்லுடைத்(து) இட்டுப் புகையெழ ஊதிப் புசுபுசு என்று புகையு(ம்)எழுந்(து) இண்(டு)இடுக்கும் போகப் பொறுத்துத் திறக்கவும் கைக்(கு)எலி சிக்கும் உயிர்மூச்சற்(று). அறுவடைச் சூட்டோ(டு) அதைத்தீயில் சுட்டுப் பொறுபொறு என்று பொரிக்கும் பொழுது மொறுமொறு வாலுக்கு முந்து.
Corresponding passage from The rat trappers:
“When they find a rat burrow in a rice field, they plug all the exits, save one. They take an earthen pot with a hole, the size of a one rupee coin, punched through the bottom, fill it with green leaves, and set the leaves on fire. They place the mouth of the pot flush against the burrow entry, and blow through the pot’s hole. After smoke has filled every underground chamber, they excavate the burrow, and pull out all the asphyxiated rats. In the case of field rats, there might be a stockpile of grain inside the burrow as a bonus.
At sunset, the Irula pile up dry thorns in a fallow field and barbeque the rats. The fur is singed and removed along with the guts, and the rest roasted. Children vie for the crunchy tails and feet.”