மிஸ். தமிழ் பாடல்கள்
கற்றவித்தை ஏதுமில்லை, காட்டு மனிதன்,ஐயே —பாரதி
         

பாடல்கள் | டைரிக் குறிப்புகள் | Android Apps

 


ஒற்றைரோஜாவும் உடன்பிறப்பும்
(நேரிசை வெண்பா)

விடுப்புக் கழிந்தெங்கள் வீடடையக் கண்டோம்
செடியிலொற்றை ரோஜா சிகப்பாய் — உடனே
குதித்தோடித் தம்பி குதூகலமாய்த் தாவிப்
பிடித்துத்தின் றானிதழ் பிய்த்து.