கற்றவித்தை ஏதுமில்லை, காட்டு மனிதன்,ஐயே —பாரதி





எலிக்கேணி வள்ளல்
(பன்னிரண்டடியான் வந்த பஃறொடை வெண்பா)
குளியல் அறையிலன்று குட்டிஎலி ஒன்று குளுகுளுபேஸ்ட் சாப்பிட்டுக் கும்மாளம் போட, அதுசமயம் உள்ளே அடியேனும் போக, கதவுவழி இல்லாமற் கண்கள் மருள,எலி எப்படி எம்பியும் ஏழடிச் சன்னல(து) எட்டாமல் மூலை இடுங்கி நடுங்கியதன் கண்கள்-ஓ! மௌனக் கருப்பாய் அலற"ஆ...!" சன்னல்மேற் கம்பொன்றைச் சாத்தவும் குட்டியது சட்டென ஏறியே தப்பிப் பிழைத்தது. சக்கரவி யூகம் தகர்த்தெறிந்து மீள எலிக்கடி யேனுயர் ஏணியும் ஈந்தேன் கலியுக வள்ளல்யாம் காண்.
![]()
![]()
![]()
![]()
![]()
