மிஸ். தமிழ் பாடல்கள்
கற்றவித்தை ஏதுமில்லை, காட்டு மனிதன்,ஐயே —பாரதி
         

பாடல்கள் | டைரிக் குறிப்புகள் | Android Apps

 


இந்த நாள்
2012/02/01

அனைவருக்கும் முன்பாய் அலுவலகம் அடையும் தோழியை, சூரிய உதயம் பற்றிக் கேள்வி ஞானம் மட்டுமே உள்ள நானும் ஒரு நாள் முந்தி விட, அந்த நாளை விடாப்பிடியாய் பதிவு செய்யும் முயற்சியாய், அன்றிரவே ஒரு நேரிசை வெண்பா எழுதினேன்.

சென்னைஅக் டோபர் பதினொன் றுபதினொன்று
அன்புள்ள டைரி: சரித்திரத்தில் — என்றேனும்
முந்தியதுண் டோஇடி மின்னலை? இந்தநாள்
முந்தினேன்கா யத்ரியை நான்.

என்னுடைய முதல் வெண்பா முயற்சி. அதற்கேற்ப மோனை அமைக்கத் தவறியிருந்தேன்! பின்பு தவறை உணர்ந்து—புலவர் குழந்தை எதுகை, மோனை அமைதியை வலியுறுத்தத் "தொடையதிகாரம்" என்று ஒரு முழுப் புத்தகமே ஒதுக்கியிருக்கிறார்—திருத்தி எழுதிய பாடல் இங்கே.