மிஸ். தமிழ் பாடல்கள்
கற்றவித்தை ஏதுமில்லை, காட்டு மனிதன்,ஐயே —பாரதி
         

பாடல்கள் | டைரிக் குறிப்புகள் | Android Apps

 


குழப்புங்குடி
(இன்னிசை வெண்பா)

ஏழுகடல் தாண்டிப்பின் ஏழுமலை தாண்டிப்பின்
பாழுங் குகைக்குள்ளே பச்சைக் கிளிக்குள்ளே
ஆருயிர் காத்த அசுரன் குடிபெயர்த்தான்
பாரியாள் வாங்கியகைப் பைக்கு.