மிஸ். தமிழ் பாடல்கள்
கற்றவித்தை ஏதுமில்லை, காட்டு மனிதன்,ஐயே —பாரதி
         

பாடல்கள் | டைரிக் குறிப்புகள் | Android Apps

 


நண்பனின் இரகசியம்
(ஐந்தடிப் பஃறொடை வெண்பா)

உளங்கசிந்த நேரம் உளறினாய் நீச்சற்
குளத்துள் சிறுநீர் குசும்பாய்க் கழித்ததை.
"யாரிடமுஞ் சொல்லாதே" என்றாய். இதைப்போய்நான்
யாரிடஞ் சொல்வேன்? இணையத்தில் ஏற்றலாம்
யாப்பிலொரு பாட்டினை யாத்து.

       

பாடலுக்கான டைரிக் குறிப்பு