மிஸ். தமிழ் பாடல்கள்
கற்றவித்தை ஏதுமில்லை, காட்டு மனிதன்,ஐயே —பாரதி
         

பாடல்கள் | டைரிக் குறிப்புகள் | Android Apps

 


காத்திருந்த நேரம்
(பன்னிரண்டடியான் வந்த பஃறொடை வெண்பா)

நரமா மிசம்தின்னும் நால்வர்ஊர் சுற்றப்
பரதேசம் வந்தனர் பாத நடையாக.
வந்த உடனே வயிற்றுப் பசிகிள்ள
எந்தக் கடைதரும் இட்லிச் சுவையதிகம்
என்று வினவியறிந்(து) ஏராள மானவர்கள்
நின்ற கடைநோக்கி நேராகச் சென்றனர்.
கல்யாண வீடாய்க் கடையில் அமளியன்று.
கல்லாவில் வீற்ற கறார்ப்பார்ட்டி பேரெழுதிக்
கூவி வரிசையாய்க் கூப்பிட, காத்திருந்தே
ஆவியா யிற்றெம் அசுரப் பசியென்று
நாவடக்கி மெல்ல நகர்ந்தனர் நம்கதையின்
மூவரும் பார்த்தபடி மூஞ்சு.

       

Inspired by the xkcd comic http://xkcd.com/30.