கற்றவித்தை ஏதுமில்லை, காட்டு மனிதன்,ஐயே —பாரதி





மிஸ். தமிழ் பாடல்கள்
(பன்னிரண்டடியான் வந்த பஃறொடை வெண்பா)
இண்டர்நெட், கேபிள் இணைப்பு களில்இடர் உண்டாக, பொங்கிய உற்சாகம் குன்றுமுன் சன்னற் கதவினைத் தள்ளித் திறந்திட்டுப் பண்டைய பாவியல் பற்றியநூல் வாசித்தேன். முன்னடியில் சன்னல் முழுதாய்த் திறந்திட்டும் தென்றல் வரவு தெரியவில்லை — வந்தகொசு உண்மை; கடிமிக உண்மை! கடிமறந்து, அண்ணாந்து விட்டத்தை ஆவென்றே பார்த்தென்றன் எண்ணமது போனவழி யாத்திட்டேன் வெண்பாக்கள். என்பாக்கள் உங்களுக்காய் இத்தளத்தில் ஏற்றுகிறேன். கண்டு மகிழ்ந்ததையும், கண்ட குறைகளையும் மின்னஞ்சல் செய்யலா மே.
![]()
![]()
![]()
![]()
![]()
