முதலைக் கில்லை நீத்தும் நிலையும். (45) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 5 5 5 |
அச்சமு நாணமும் அறிவிலோர்க் கில்லை. (46) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 5 5 5 |
பெருமையும் சிறுமையுந் தான்தர வருமே. (30) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 5 6 6 |
பூனைக் கில்லை தவமுந் தயையும். (42) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 5 4 5 |
அறிவுடை ஒருவனை அரசனும் விரும்பும். (39) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 4 5 6 |
புணைமீ தல்லது நெடும்புன லேகேல். (79) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 6 5 4 |
வேதியர்க் கழகு வேதமு மொழுக்கமும். (4) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 7 4 6 |
வறிஞர்க் கழகு வறுமையிற் செம்மை. (15) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 7 4 5 |
கொண்டோ ரெல்லாம் பெண்டிரு மல்லர். (22) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 4 4 7 |
ஒருநாட் பழகினும் பெரியோர் கேண்மை இருநிலம் பிளக்க வேர்வீழ்க் கும்மே. (34) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 10 9 12 |
யானைக் கில்லை தானமுந் தருமமும். (41) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 4 7 4 |
நாளுங் கிழமையும் நலிந்தோர்க் கில்லை. (47) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 4 6 7 |
எழுநிலை மாடங் கால்சாய்ந் துக்குக் கழுதை மேய்பா ழாயினு மாகும். (54) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 11 8 8 |
ஆரையாம் பள்ளத் தூடே வாழினும் தேரை பாம்பிற்கு மிகவஞ் சும்மே. (62) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 11 8 8 |
காலையு மாலையும் நான்மறை யோதா அந்தண ரென்போ ரனைவரும் பதரே. (65) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 7 10 10 |
மெய்யுடை யொருவன் சொலமாட் டாமையாற் பொய்போ லும்மே பொய்போ லும்மே. (74) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 9 8 11 |
இவைகா ணுலகிற் கியலா மாறே. (82) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 5 2 4 |
எழுத்தறி வித்தவ னிறைவ னாகும். (1) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 7 3 4 |
மன்னவர்க் கழகு செங்கோன் முறைமை. (5) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 6 7 3 |
உண்டிக் கழகு விருந்தோ டுண்டல் (10) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 7 3 4 |
விலைமகட் கழகுதன் மேனி மினுக்குதல். (13) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 8 6 4 |
அடினுமா வின்பால் தன்சுவை குன்றாது. (23) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 7 5 3 |
ஊட்டினும் பல்விரை யுள்ளிகம ழாதே. (29) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 5 3 7 |
கல்லா ஒருவன் குலநலம் பேசுதல் நெல்லினுட் பிறந்த பதரா கும்மே. (36) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 12 8 10 |
இரந்தோர்க் கீவது முடையோர் கடனே. (58) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 7 3 5 |
துணையோ டல்லது நெடுவழி போகேல். (78) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 6 2 6 |
உழவர்க் கழகிங் குழுதூண் விரும்பல். (7) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 6 3 8 |
மந்திரிக் கழகு வரும்பொரு ளுரைத்தல். (8) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 7 3 8 |
தெள்ளிய ஆலின் சிறுபழத தொருவிதை தெண்ணீர்க் கயத்துச் சிறுமீன் சினையினும் நுண்ணிதே யாயினும் அண்ணல் யானை அணிதேர் புரவி யாட்பெரும் படையொடு மன்னர்க் கிருக்க நிழலா கும்மே. (17) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 29 24 24 |
ஞானிக் கில்லை யின்பமுந் துன்பமும். (43) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 5 8 3 |
சிதலைக் கில்லை செல்வமுஞ் செருக்கும். (44) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 8 3 6 |
கேளுங் கிளையுங் கெட்டோர்க் கில்லை. (48) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 7 2 6 |
குடியலைத் திரந்துவெங் கோலொடு நின்ற முடியுடை யிறைவனாம் மூர்க்கனும் பதரே. (66) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 15 10 10 |
முதலுள பண்டங் கொண்டுவா ணிபஞ்செய்து அதன்பய னுண்ணா வணிகரும் பதரே. (67) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 13 12 8 |
தந்திரிக் கழகு தறுக ணாண்மை. (9) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 8 4 2 |
குலமகட் கழகுதன் கொழுநனைப் பேணுதல். (12) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 10 5 4 |
அறிஞர்க் கழகு கற்றுணர்ந் தடங்கல். (14) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 10 4 4 |
உற்றோ ரெல்லாம் உறவின ரல்லர். (21) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 3 2 8 |
புகைக்கினும் காரகில் பொல்லாங்கு கமழாது. (26) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 10 4 5 |
உடைமையும் வறுமையும் ஒருவழி நில்லா. (49) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 2 5 8 |
கொடுங்கோன் மன்னர் வாழும் நாட்டிற் கடும்புலி வாழுங் காடு நன்றே. (63) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 12 11 6 |
வித்தும் ஏரும் உளவா யிருப்ப எய்த்தங் கிருக்கும் ஏழையும் பதரே. (68) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 11 5 11 |
செல்வர்க் கழகு செழுங்கிளை தாங்குதல். (3) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 9 2 7 |
சிறியோ ரெல்லாம் சிறியரு மல்லர். (19) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 4 2 9 |
சுடினுஞ் செம்பொன் தன்னொளி கெடாது. (24) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 8 6 1 |
சிறப்புஞ் செல்வமும் பெருமையு முடையோர் அறக்கூழ்ச் சாலை அடையினும் அடைவர். (51) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 14 7 11 |
இல்லோ ரிரப்பதும் இயல்பே இயல்பே. (57) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 5 1 8 |
வழியே யேகுக வழியே மீளுக. (81) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 3 1 8 |
கல்விக் கழகு கசடற மொழிதல். (2) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 9 1 5 |
பெற்றோ ரெல்லாம் பிள்ளைக ளல்லர். (20) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 5 1 9 |
அரைக்கினுஞ் சந்தனந் தன்மண மறாது. (25) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 7 9 1 |
கலக்கினும் தண்கடல் சேறா காது. (27) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 10 3 2 |
நூறாண்டு பழகினும் மூர்க்கர் கேண்மை நீர்க்குட் பாசிபோல் வேர்க்கொள் ளாதே. (33) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 16 8 9 |
குடைநிழ லிருந்து குஞ்சரம் ஊர்ந்தோர் நடைமெலிந் தோரூர் நண்ணினும் நண்ணுவர். (50) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 8 16 11 |
குன்றத் தனையிரு நிதியைப் படைத்தோர் அன்றைப் பகலே யழியினும் அழிவர். (53) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 14 6 11 |
குன்றுடை நெடுங்கா டூடே வாழினும் புன்றலைப் புல்வாய் புலிக்கஞ் சும்மே. (61) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 15 9 7 |
சான்றோ ரில்லாத் தொல்பதி யிருத்தலின் தேன்றேர் குறவர் தேயம் நன்றே. (64) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 14 6 11 |
தன்மனை யாளைத் தனிமனை யிருத்திப் பிறர்மனைக் கேகும் பேதையும் பதரே. (70) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 15 10 7 |
பொய்யுடை யொருவன் சொல்வன் மையினால் மெய்போ லும்மே மெய்போ லும்மே. (73) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 5 10 13 |
பழியா வருவது மொழியா தொழிவது. (76) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 4 1 9 |
சுழியா வருபுன லிழியா தொழிவது. (77) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 4 1 9 |
பெரியோ ரெல்லாம் பெரியரு மல்லர். (18) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 2 2 11 |
நாற்பாற் குலத்தின் மேற்பா லொருவன் கற்றில னாயிற் கீழிருப் பவனே. (37) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 15 6 9 |
மணவணி யணிந்த மகளி ராங்கே பிணவணி யணிந்துதங் கொழுநரைத் தழீஇ உடுத்த ஆடை கோடி யாக முடித்த கூந்தல் விரிப்பினும் விரிப்பர். (56) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 25 17 16 |
வைசியர்க் கழகு வளர்பொரு ளீட்டல். (6) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 7 0 10 |
பெண்டிர்க் கழகெதிர் பேசா திருத்தல். (11) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 11 1 5 |
தேம்படு பனையின் திரள்பழத் தொருவிதை வானுற வோங்கி வளம்பெற வளரினும் ஒருவர்க் கிருக்க நிழலா காதே. (16) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 19 9 19 |
நல்ல ஞாலமும் வானமும் பெறினும் எல்லா மில்லை யில்லில் லோர்க்கே. (59) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 4 10 14 |
எக்குடிப் பிறப்பினும் யாவரே யாயினும் அக்குடியிற் கற்றோரை மேல்வரு கென்பர். (38) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 17 6 11 |
அறத்திடு பிச்சை கூவி யிரப்போர் அரசோ டிருந்தர சாளினும் ஆளுவர். (52) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 14 3 11 |
பெற்றமுங் கழுதையும் மேய்ந்த அப்பாழ் பொற்றொடி மகளிரும் மைந்தருங் கூடி நெற்பொலி நெடுநக ராயினு மாகும். (55) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 21 16 10 |
தன்மனை யாளைத் தாய்மனைக் ககற்றிப் பின்பவட் பாராப் பேதையும் பதரே. (69) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 18 7 7 |
தன்னா யுதமுந் தன்கையிற் பொருளும் பிறன்கையிற் கொடுக்கும் பேதையும் பதரே. (71) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 18 9 7 |
எழிலார் முலைவரி விழியார் தந்திரம் இயலா தனகொடு முயல்வா காதே. (80) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 7 5 16 |
அடினும்பால் பெய்துகைப் பறாதுபேய்ச் சுரைக்காய் . (28) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 14 2 5 |
சிறியோர் பெரும்பிழை செய்தன ராயிற் பெரியோ ரப்பிழை பொறுத்தலு மரிதே. (32) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 15 3 13 |
தறுகண் யானை தான்பெரி தாயினும் சிறுகண் மூங்கிற் கோற்கஞ் சும்மே. (60) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 15 11 3 |
இருவர்தஞ் சொல்லையும் எழுதரங் கேட்டே இருவரும் பொருந்த வுரையா ராயின் மனுமுறை நெறியின் வழக்கிழந் தவர்தாம் மனமுற மறுகிநின் றழுத கண்ணீர் முறையுறத் தேவர் மூவர் காக்கினும் வழிவழி யீர்வதோர் வாளா கும்மே. (75) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 29 27 40 |
சிறியோர் செய்த சிறுபிழை யெல்லாம் பெரியோ ராயிற் பொறுப்பது கடனே. (31) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 16 2 11 |
வாய்ப்பறை யாகவும் நாக்கடிப் பாகவும் சாற்றுவ தொன்றைப் போற்றிக் கேண்மின். (72) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 21 7 6 |
கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சை புகினும் கற்கை நன்றே. (35) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 17 8 0 |
அதனால், அச்சமுன் ளடக்கி யறிவகத் தில்லாக் கொச்சை மக்களைப் பெறுதலி னக்குடி எச்சமற் றேமாந் திருக்கை நன்றே. (40) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 31 10 9 |